மும்பை தாராவியில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. தற்போது மகாராஷ்டிரத்தில் 2,919 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 30 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மட்டும் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தாராவியில் கரோனாவால் நேற்று வரை 8 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று 58 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தாராவியில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.