இந்தியா

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

DIN

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரதமர் மோடியுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால், அவருடன் சண்டையிட இப்போது நேரம் இல்லை. கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க முதல் ஆயுதமாக இருப்பது பரிசோதனை மட்டுமே.

அதாவது கடந்த 72 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் பரிசோதனை மையங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லை. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வல்ல. எனவே, பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே இதனைத் தடுக்க முடியும். என்று தெரிவித்தார். 

மேலும், காணொளி வாயிலாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT