கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்வு

​கர்நாடகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது.

DIN


கர்நாடகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி மாநில சுகாதாரத் துறை அலுவலர் தெரிவிக்கையில், மாலை 5 மணி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 418 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பலியாகியுள்ளனர், 129 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

செவ்வாய்கிழமை நண்பகல் வரை 19 மணி நேரத்தில் 80 வயது நபர் ஒருவர் பலியானார். புதிதாக 7 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த 5 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை நண்பகல் முதல் மாலை 5 மணி வரை 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 114-இல் இருந்து 129 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த மூன்று நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT