கர்நாடகத்தில் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலமாக சிகிச்சை தர இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் இதுகுறித்து கூறுகையில், 'கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கு மருத்துவ கவுன்சில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிகிச்சை அளிக்க எச்.சி.ஜி பெங்களூரு ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் டாக்டர் விஷால் ராவிற்கு அனுமதி அளித்துள்ளதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் உடலில் உள்ள பிளாஸ்மா செல்களில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி இம்யூன்) எடுத்து, அதனை பிற நோயாளிகளுக்குச் செலுத்தி குணப்படுத்தும் முறையே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது.
தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தும்பொருட்டு கேரள அரசு ஆய்வு செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.