இந்தியா

தில்லியில் கரோனா பாதிப்பு 2,081 ஆக உயர்வு: கேஜரிவால் தகவல்

DIN

தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 47 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: 

தில்லி அரசு ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கும் 2,000 உணவுக் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் ரேஷன் கார்டுகள் இல்லாத 30 லட்சம் பேருக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை முதல் ஊடகவியலாளர்களுக்கான கரோனா பரிசோதனையைத் தொடங்க சிறப்பு மையத்தை அமைத்துள்ளோம். 

தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் 83% பேர் வேறு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT