கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செவ்வாய்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்:
கண்ணூர் - 10
பாலக்காடு - 4
காசர்கோட் - 3
மலப்புரம் - 1
கொல்லம் - 1
கேரளத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.