புது தில்லி: மும்பையில் ஊடகவியலாளர்கள் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், புது தில்லியில் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு கரோனா பாரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி டிவிட்டரில் ஒருவர் வைத்தப் பதிவுக்கு, 'நிச்சயம், கரோனா பரிசோதனை மேற்கொள்வோம்' என்று பதிலளித்துள்ளார் தில்லி முதல்வர். மேற்கொண்டு இது பற்றி வேறு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தில்லியில் புதிதாக 78 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,081 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, மும்பையில் ஊடகவியலாளர்களுக்கு கடந்த 16 மற்றும் 17ம் தேதி மிகப்பெரிய அளவில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நாளிதழ், புகைப்படக் கலைஞர்கள், கேமராமேன் உள்பட 171 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.