இந்தியா

விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்: ஐசிஎம்ஆர்

DIN


சீனாவிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதை துரிதமாகக் கண்டறிவதற்காக சீனாவின் இரண்டு நிறுவனங்களிடமிருந்து விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியா கொள்முதல் செய்தது. 

ஆனால் இந்த கருவிகள் சரியாகச் செயல்படவில்லை என்றும் துல்லியத்தன்மை இல்லை என்றும் ராஜஸ்தான் மாநிலம் ஐசிஎம்ஆர்-இடம் புகார் அளித்தது. இந்தப் புகாரையடுத்து, கருவிகளின் தரம் குறித்து ஐசிஎம்ஆர் 3 மாநிலங்களிடம் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் அடுத்த 2 நாள்களுக்கு விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளிடம் ஐசிஎம்ஆர் கடந்த 22-ஆம் தேதி அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சீனாவிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT