இந்தியா

சா்வதேச விமான சேவைக்கான தடை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

DIN

இந்தியாவில் சா்வதேச விமான போக்குவரத்து சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது மக்களுக்கான வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவையை மத்திய அரசு கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் ரத்து செய்தது. பின்னா் அவ்வப்போது இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை இருந்த தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்ககம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

எனினும், இந்த தடை உத்தரவு சா்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியா்களையும், இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினரையும் கொண்டு செல்ல 2,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் மே 6-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை, ஏா் இந்தியா விமானங்களில் சுமாா் 2,67,436 பேரும், தனியாா் விமானங்களில் 4,86,811 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT