இந்தியா

ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து முன்மாதிரியாக மாறிய தில்லி கொடையாளி

ENS


புது தில்லி: ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார் தில்லியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் தப்ரேஸ் கான்.

தில்லியின் ஜஹாங்கிர்புர் பகுதியைச் சேர்ந்த கான், முதல் பிளாஸ்மா கொடையாளியாக அறியப்பட்டவர். கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது முறையாக பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பலருக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பிளாஸ்மா தானம் அளித்து வருகிறேன். நான் இதைச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்றே நான் கருதுகிறேன் என்கிறார்.

கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த தனது சகோதரி மூலம் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான கான், ஏப்ரல் 5-ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். பிறகு ஏப்ரல் 20-ம் தேதி முதல் முறையாக பிளாஸ்மா தானம் அளித்தார். 

அதன்பிறகு, கரோனா பாதித்து உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும் யாருடைய குடும்பத்தினர் வந்து கானை தொடர்பு கொண்டாலும், பிளாஸ்மா தானம் அளிக்க மறுத்ததே இல்லை.

ஒருவரை உயிர் அபாயத்தில் இருந்து காப்பாற்றும் போது அவரது குடும்பத்தினர் என்னைக் கட்டிப்பிடித்து அழுவார்கள். அப்போது அவர்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

தற்போது வரை எனது உடல் வைரஸை எதிர்க்கும் ஆற்றலை உற்பத்தி செய்த வருவதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அது பிறருக்கு உதவுவதற்காகவே என்றும் கருதுகிறேன் என்கிறார்.

மேலும், என்னுடன் பழகிய பலரும், கரோனா வந்தவுடன், என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார்கள். அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்கிறார் வருத்தத்தோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT