இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,129 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். 

இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது:

"கேரளத்தில் புதிதாக 1,129 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 89 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 114 பேர். 880 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு தொற்று இருப்பவர்கள் உறுதி செய்யப்பட்டவர்களில் 58 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,862 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 13,779 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 1,43,996 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 20,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அங்கு 492 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT