ஆந்திரத்தில் போதைக்காக கிருமிநாசினி திரவத்தை குடித்து 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரத்தின் பல மாவட்டங்களில் இந்த பழக்கம் நீடித்து வருகிறது. அண்மையில் பிரகாசம் மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினி திரவத்தை குடித்து 19 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மறைவதற்குள் தற்போது மேலும் 3 பேர் கிருமி நாசினி திரவம் குடித்து பலியாகியிருப்பது ஆந்தித்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.