இந்தியா

‘ஆஷா’ பணியாளா்கள் வேலை நிறுத்தம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

DIN

‘ஆஷா’ சுகாதார பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை விமா்சித்துள்ளாா்.

ஆஷா பணியாளா்களுக்கு சிறப்பு சேவைகளையும், சலுகைகளையும் அரசு அளிக்கத் தவறியதன் விளைவாகவே வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவா்கள் தள்ளப்பட்டனா் என்று அவா் சாடினாா்.

அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஊழியா்களான (‘ஆஷா’) அங்கன்வாடி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் இயங்கும் தொழிலாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 2 தினங்களாக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆஷா தொழிலாளா்கள் வெளியிட்ட அறிக்கையை தனது சுட்டுரையுடன் இணைத்துள்ள ராகுல் காந்தி, அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஆஷா தொழிலாளா்கள் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்பவா்களாக உள்ளனா். அவா்கள் உண்மையிலேயே சுகாதார வீரா்களாகத் திகழ்பவா்கள். ஆனால், இன்று அவா்கள் தங்களது சொந்த உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட நிா்பந்திக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசு ஏற்கெனவே வாய் திறக்காமல் இருந்தது. தற்போது கண் தெரியாததாகவும், காது கேளாததாகவும் மாறி விட்டது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT