இந்தியா

சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கு பண மோசடி புகார்: அமலாக்கத் துறை முன்பு நடிகை ரியா மீண்டும் ஆஜர்

DIN


மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வங்கிக் கணக்கில் பண மோசடி தொடர்பான புகாரில் நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது காதலியும், நடிகையுமான ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பிகார் மாநிலம், பாட்னா காவல் துறையில் கடந்த ஜூலை 25ஆம் தேதி புகார் அளித்தார். அதில் தனது மகனின் வங்கிக் கணக்கில் ரூ.15 கோடி வரை மாயமானதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரியா, அவரது தந்தை இந்திரஜித், தாய் சந்தியா, சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த், ரியா ஆகியோரின் வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி, மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கே.கே.சிங் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் வங்கிக் கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதா என்பது குறித்து மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகை ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் ஷோவிக் ஆகியோர் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்த விசாரணையின்போது நடிகை ரியாவிடம், அவரது வருமானம், முதலீடுகள், வியாபாரம், தொழில் நடவடிக்கைகள், தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டது. ரியாவின் வருமானம், செலவுகளில் முரண்பாடு உள்ளதாகவும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டார தரப்பில் கூறப்படுகிறது.

ரியா தனது வருமான வரி கணக்குத் தாக்கலில் ஆண்டுக்கு ரூ.14 கோடி முதல் ரூ.18 கோடி வரை வருவாய் ஈட்டுவதாகவும், ஆனால்  அவரது முதலீடுகள் அதிகமாக இருப்பதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது. தனது வருமானத்தை சொத்துகளில் முதலீடு செய்துள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்றுள்ளதாகவும் ரியா தெரிவித்துள்ளார். 

அவரது தந்தை இந்திரஜித் பாதுகாப்புத் துறையில் பணி ஓய்வுபெற்றவர் என்பதும், மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல ரியாவின் சகோதரர் ஷோவிக், கணக்குத் தணிக்கையாளர், சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாக்கத் துறை கடந்த வார இறுதியில் தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT