உலகுக்கே இந்தூர் முன்மாதிரியாக உள்ளது: சிவராஜ் சௌகான் 
இந்தியா

உலகுக்கே இந்தூர் முன்மாதிரியாக உள்ளது: சிவராஜ் சௌகான்

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 4வது ஆண்டாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

DIN

போபால்: இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 4வது ஆண்டாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

தூய்மை என்பது இந்தூரின் இயற்கையான தோற்றமாகவே மாறிவிட்டது. இதற்காக பாடுபட்ட இந்தூர் நகர மக்களுக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், உலகுக்கே, இந்தூர் நகரம் ஒரு முன்மாதிரியாக உள்ளது. நான்காவது முறையாக நாட்டின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூர் உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தை மேலும் முன்னேற்றும் நடவடிக்கையில் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் சிவராஜ் சிங் சௌகான் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT