இந்தியா

கேரள விமான விபத்து:பலி 21 ஆக அதிகரிப்பு

கேரள விமான விபத்தில் காயமடைந்த பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்தது.

DIN

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்த பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்தது.

துபையிலிருந்து கோழிக்கோட்டுக்கு கடந்த 7-ஆம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த 149 பயணிகள் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிலா் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனா்.

கடந்த சில நாள்களில் சிகிச்சை பலனின்றி 4 போ் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மஞ்சுளா குமாரி (37) என்பவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT