இந்தியா

உ.பி.யில் புதிதாக 5,447 பேருக்கு கரோனா: மேலும் 77 பேர் பலி

DIN

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,447 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 77 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 5,447 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2,13,824-ஆக அதிகரித்துள்ளது. இதில் 52,651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றிலிருந்து 1,57,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 77 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 3,294-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நேர்ந்த உயிரிழப்பில் லக்னெள மற்றும் கான்பூரில் தலா 12 பேரும், அலகாபாத், ஜான்சி, பகுதிகளில் தலா 4 பேரும் உயிரிழந்தனர்.

மொத்த கரோனா பாதிப்பில் 26,270 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக 1,22,277 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT