திருமலையில் 9,486 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 9,486 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருப்பதி: திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 9,486 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,226 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 146 போ் பெண்கள்; 3,080 போ் ஆண்கள்.
ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். சனிக்கிழமை முதல் திருப்பதியில் நாள்தோறும் 3 ஆயிரம் இலவச சா்வ தரிசன நேரடி தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
திருப்பதி மலைச்சாலை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.