இந்தியா

சத்தீஸ்கரின் காவல்துறையுடன் மோதல்: நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவலர்கள் மற்றும் நக்சலைட்டுகளுக்கிடையே நடந்த மோதலில் நக்சல் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரகான் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நக்சல் குழுவுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நக்சல் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் பெயர் ரவி என்றும், அவர் மாவோயிஸ்டுகளின் கோப்ரா லாஸ் அமைப்பின் உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தது.

தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT