இந்தியா

15வது நிதிக்குழுவின் பரிந்துரை: தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு

DIN

புது தில்லி: 15வது நிதிக்குழுவின் பரிந்துரையினை ஏற்று தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

வரி வருவாய் ஆதாரங்களை கணக்கில் கொண்டு மாநிலங்களின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டியது  மத்திய அரசின் கடமையாகும்.

அதற்கான பரிந்துரைகளை மாநில அரசுகள் சமரப்பிக்கும் திட்ட மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு நிதிக்குழு பரிந்துரைப்பது வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். அதன்படி பல்வேறு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பரிந்துரைகளை 15வது நிதிக்குழு  நிதியமைச்சகத்தின் முன்வைத்திருந்தது.

இந்நிலையில் 15வது நிதிக்குழுவின் பரிந்துரையினை ஏற்று தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும் பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ. 638 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ள விபரமும் நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT