இந்தியா

பிரிட்டனிலிருந்து கேரளம் வந்த மேலும் 10 பேருக்கு கரோனா

DIN

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்த மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, ''பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மொத்தமாக 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு புதியவகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவக்கப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT