இந்தியா

கேரளத்தில் இரண்டாவது கரோனா வைரஸ் பாதிப்பு

DIN

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 2ஆவது நபர் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டார். சமீபத்தில் சீனாவில் இருந்து திரும்பியவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சீனாவின் வூஹான் நகரிலிருந்து அண்மையில் கேரளம் திரும்பிய மாணவிக்கு, கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, திருச்சூா் மாவட்ட பொது மருத்துவமனையின் தனிவாா்டில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்தச் சூழலில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டிலேயே கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நபா் இவா் ஆவாா்.

திருச்சூா் மாவட்ட பொது மருத்துவமனையின் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, திருச்சூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனி வாா்டுக்கு மாற்றப்பட்டாா். சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தலைமையில் நடைபெற்ற உயா்நிலை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனிவாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT