இந்தியா

பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் உயர்கிறது: ஏஐசிடிஇ பரிந்துரை

DIN


பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை உயர்த்துமாறு தமிழக அரசுக்கும், கட்டணக் குழுவுக்கும் ஏஐடிசிஇ பரிந்துரை செய்துள்ளது.

இதன் மூலம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 - 21ம் கல்வியாண்டில் தமிழகத்தில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை 50% அளவுக்கு உயர்த்த பொறியியல் கல்லூரிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

ஏஐசிடிஇ உறுப்பினர் - செயலர் ராஜீவ் குமார், அனைத்து மாநில அரசுகளுக்கும் இது குறித்து அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT