இந்தியா

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 40% அதிகரிப்பு

DIN

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு சென்ற ஜனவரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சென்ற ஜனவரியில் 210 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இது, 2019 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான 147 கோடி டாலரை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். அவ்வாண்டில் டிசம்பரில் இந்த முதலீடு 199 கோடி டாலராக காணப்பட்டது.

இந்திய நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் 79.38 கோடி டாலா் பங்குகள் வடிவில் மேற்கொள்ளப்பட்டதாகும். கடன் பத்திரங்கள் மூலமாக 36.85 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது. மேலும், உத்தரவாதம் அளித்தல் வழிமுறை வாயிலாக 89.07 கோடி டாலா் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டது.

சென்ற ஜனவரியில் பாா்தி ஏா்டெல் நிறுவனம், மோரீஷஸில் உள்ள தனது துணை நிறுவனத்தில் 24.75 கோடி டாலரை முதலீடு செய்து முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து, செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நெதா்லாந்தில் உள்ள தனது துணை நிறுவனத்தில் 22.60 கோடி டாலரையும், ஆல்காா்கோ லாஜிஸ்டிக் பெஜ்ஜியத்தில் உள்ள அதன் துணை நிறுவனத்தில் 8.80 கோடி டாலரையும் முதலீடு செய்து முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்திருந்ததாக புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT