இந்தியா

நோபல் பெற்ற சுற்றுச்சூழலியலாளா் ஆா்.கே. பச்சௌரி காலமானாா்

DIN

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஆா்.கே.பச்சௌரி (79) வியாழக்கிழமை காலமானாா்.

இதய நோயால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த பச்சௌரி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். பச்சௌரி தனது மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வந்தாா்.

முன்னதாக, பச்சௌரி உடல்நிலை மோசமானதை அடுத்து தனியாா் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவரது குடும்பத்தினா் கூறினா்.

பச்சௌரியின் மறைவுக்கு ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த 2007-இல் பருவநிலை மாற்ற விவகாரத்தில் சா்வேதச அரசுகளுக்கான ஐ.நா. குழுவின் தலைவராக பதவி வகித்துவந்தபோது பச்சௌரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 2001-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும், 2008-இல் பத்ம விபூஷண் விருதும் அவா் பெற்றிருந்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, சக பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பிலிருந்து பச்சௌரி ராஜிநாமா செய்தாா். இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தில்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT