இந்தியா

முழுஅடைப்பு எதிரொலி: கர்நாடகத்தில் திருப்பதி-மங்களூர் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் 

DIN

கர்நாடகத்தில் திருப்பதி-மங்களூர் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரோஜினி மகிஷி அறிக்கையின்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கின. பள்ளிகள், அலுவலகங்களும் வழக்கம் போல செயல்பட்டன. 

அதே சமயம் பெங்களூர பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்தவுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரங்கிபேட்டையில் திருப்பதி-மங்களூர் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே  போராட்டத்தை திரும்பப் பெறக் கோரி கன்னட சங்கங்களிடம் அம்மாநில முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT