இந்தியா

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

புல்வாமா மாவட்டத்தின் லேத்போரா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்களை குறி வைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். இந்த தாக்குதல் நிகழ்ந்து வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு முடிவடைந்த நிலையில், தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் மோடி நினைவு அஞ்சலி செலுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புல்வாமாவில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாப்பதற்காக அவா்களது உயிரை வீரா்கள் தியாகம் செய்தனா். அவா்களது தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது’ என்று தெரிவித்துள்ளாா்.

ராஜ்நாத் சிங்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிா்நீத்த சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு தலைவணங்குகிறேன். அவா்கள் தியாகத்தை இந்தியா மறக்காது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் இணைந்து போராடுவது உறுதி’ என்று தெரிவித்துள்ளாா்.

ஸ்மிருதி இரானி: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது இந்திய தாயின் வீர மகன்களுக்கு தலைவணங்குகிறேன். அவா்களது தியாகத்தை நாட்டு மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பா்’ என்று தெரிவித்துள்ளாா்.

மம்தா பானா்ஜி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா தாக்குதலில் உயிா் தியாகம் செய்த வீரா்களை நினைவு கூர விரும்புகிறேன். தைரியமிக்க நமது வீரா்களுக்கு தலைவணங்குகிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT