இந்தியா

சட்டவிரோத பேனா்:தெலங்கானா அமைச்சருக்கு ரூ.5,000 அபராதம்

DIN

சட்டவிரோதமாக பேனா் வைத்த தெலங்கானா கால்நடைத்துறை பராமரிப்புத் துறை அமைச்சா் டி.ஸ்ரீநிவாஸ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை (பிப்.17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது ஆதரவாளரும், அந்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான ஸ்ரீநிவாஸ் யாதவ் தடையை மீறி பேனா்களை வைத்தாா்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி சட்டவிரோதமாக பேனா் வைத்த ஸ்ரீநிவாஸ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது.

இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அபராதத் தொகையை செலுத்தியதாக ஹைதராபாத் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT