இந்தியா

மேற்கூரை இல்லாமல் இயங்கும் நடுநிலைப்பள்ளி

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மேற்கூரை இல்லாமல் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகிறது. அதிலும், முக்கியமாக மேற்கூரை கூட இன்றி மாணவர்கள் அந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். மாணவர்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இப்பள்ளியில் படிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

கிராம் கைல்வாரா கலா பகுதியில் உள்ள இந்த நடுநிலைப்பள்ளி 2014இல் தொடங்கப்பட்டது. கோடை மற்றும் மழைக்காலங்களில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே மாணவர்கள் வெளியேறுவதக்கவும் மாணவர்களின் படிப்பு பாதிக்காத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கட்னி மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ஜெகதீஷ் சந்தா கோமோ, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT