இந்தியா

பாதுகாப்புத் துறை இணை அமைச்சா்ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு

DIN

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் கிரிஷ் சந்திர முா்முவை பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மாளிகை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து துணைநிலை ஆளுநரும், பாதுகாப்புத் துறை இணை அமைச்சரும் ஆலோசனை நடத்தினா்.

ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினா். ஜம்மு-காஷ்மீரில் ஆயுா்வேத மருத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று அந்தச் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

தோடா மாவட்டத்தில் ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT