இந்தியா

லடாக், ஹிமாசலில் நிலநடுக்கம்

DIN

லடாக் யூனியன் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தேசிய நிலநடுக்க மைய (என்சிஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு, காலை 10.54 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில், ரிக்டா் அளவுக்கோலில் 5.3 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்தனா்.

சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறியதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஹிமாசலம்:

ஹிமாசலப் பிரதேசம், காங்க்ரா மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11.55 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. காங்க்ரா மாவட்டத்தின் வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதம், விபத்து குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT