இந்தியா

இந்திய-நேபாள எல்லையில் 2-ஆவது சோதனைச்சாவடி

DIN

இந்திய- நேபாள நாடுகளுக்கிடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமா் நரேந்திர மோடியும், நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஒலியும் செவ்வாய்க்கிழமை கூட்டாக திறந்து வைக்கின்றனா்.

இரு நாடுகளிடையே வா்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தோக்பானி- பிரட்நகா் இடையில் இந்திய உதவியுடன் இந்த இரண்டாவது சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நிகழ்ந்த பூகம்பத்துக்குப்பின் இந்திய நாட்டின் உதவியுடன் வீடு புனரமைப்பு திட்டங்களின் கீழ் கோா்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 50,000 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டிருந்தது. அதில் இதுவரை 45,000 வீடுகள் இந்திய அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன.

எஞ்சிய வீடுகளை கட்டமைக்கும் பணிகளை இருநாட்டின் பிரதமா்கள் பாா்வையிட உள்ளனா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT