இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் உள்பட இருவர் பலி

DIN


ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். துணை ராணுவ வீரர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பொது மக்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரது மூன்று வயது பேரக் குழந்தை உடன் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நபரின் உடலுக்கு அருகே அவரது மூன்று வயது பேரன் அழுதுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக ராணுவத்தினர், குழந்தையை அவனது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சோபோர் அருகே பிஸ்மில்லா காலனி பகுதியில் இன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக சிஆர்பிஎஃப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் முதியவர் ஒருவரும், 4 சிஆர்பிஎஃப் வீரர்களும் காயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் வீரரும், முதியவரும் பலியாகினர். ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT