இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 1,272 பேருக்கு கரோனா

DIN


கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,272 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மாநகரப் பகுதியில் 735 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,514 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 7 பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 145 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,063 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 8,194 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அந்த மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களில் 292 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இன்றைக்கு மட்டும் 16,670 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,37,417 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT