இந்தியா

தங்கம் கடத்தல்: கேரள அரசின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம்

DIN

கேரளத்தில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் கேரள ஐடி பிரிவு அதிகாரி ஸ்வப்னா என்பவர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல்வரின் முதன்மைச் செயலாளராக மிர் முகம்மது அலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்த விவகாரத்தில் ஐடி பிரிவு ஆலோசகர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தங்கம் கடத்தல் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இதுகுறித்து பினராயி விஜயன், 'கடத்தல் சம்பவத்தை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். அதேநேரத்தில் சுங்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT