இந்தியா

ஓபிசி மாணவா்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

DIN

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோருவது தொடர்பாக தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

முந்தைய விசாரணையில், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT