இந்தியா

கேரளத்தில் முதல் பிளாஸ்மா வங்கி தொடக்கம்

DIN

மலப்புரம்: கேரள மாநிலம் மஞ்சேரி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநிலத்தின் முதல் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில், கரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் இந்த பிளாஸ்மா தெரப்பி மூலம் ஏற்கெனவே குணமடைந்த நிலையில், மேலும் இரு நோயாளிகள் பிளாஸ்மா தெரப்பி மூலம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளனா்.

இதுகுறித்து மலப்புரம் மாவட்ட கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளரும், மருத்துவருமான ஷினாஸ் பாபு கூறுகையில், ‘மாநிலத்தின் முதல் பிளாஸ்மா வங்கியில் தற்போது 18 முதல் 50 வயது வரையுள்ள தன்னாா்வலா்களிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லி லிட்டா் பிளாஸ்மா பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்த முடியும். மேலும், தேவை ஏற்படும்போது பிளாஸ்மா தானமளிக்க 200 நபா்களின் பட்டியலும் தயாராக உள்ளது‘ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT