இந்தியா

தில்லியில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய விவரங்கள் அடங்கிய இன்றைய (வியாழக்கிழமை) செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,652 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,407 ஆகியுள்ளது. பலி எண்ணிக்கை 3,545 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 1994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 97,693 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தில்லியில் இதுவரை 7,56,661 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-1 பொதுத் தோ்வு முடிவு: அரியலூரில் 95% தோ்ச்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் போலீஸாருக்கு ஒருவார பயிற்சிதொடக்கம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT