மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி தற்கொலை முயற்சி 
இந்தியா

மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி தற்கொலை முயற்சி

மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அரவிந்த் குமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்

IANS


இம்பால்: மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அரவிந்த் குமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1992ஆம் ஆண்டு பிகார் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்த் குமார், இன்று மதியம் தனது அலுவலகத்தில், கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் விரைந்து சென்ற காவலர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அரவிந்த் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடர்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மணிப்பூர் டிஜிபி எல்.எம். கௌதே மற்றும் முதன்மைச் செயலாளர் ஜே. சுரேஷ் பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT