சாதாரண, ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஒடிசா அரசு முடிவு 
இந்தியா

சாதாரண, ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஒடிசா அரசு முடிவு

சாதாரண மற்றும் ஒப்பந்த பணியாளர்களை அவர்களது பணி ஒப்பந்தக் காலம் முடிந்ததும் பணியில் இருந்து நீக்க ஒடிசா அரசு முடிவு செய்தள்ளது.

DIN


புவனேஸ்வர்: சாதாரண மற்றும் ஒப்பந்த பணியாளர்களை அவர்களது பணி ஒப்பந்தக் காலம் முடிந்ததும் பணியில் இருந்து நீக்க ஒடிசா அரசு முடிவு செய்தள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார பின்னடைவை சமாளிக்கும் வகையில் செலவினங்களை குறைக்கும் வகையில் ஒடிசா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஒடிசா அரசின் இந்த முடிவால் சுமார் 2 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அதே அளவிலான மக்களின் வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மிகக் கவனத்துடன் ஆலோசனை நடத்தி, ஒடிசா அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களது ஒப்பந்தக் காலம் முடிவடையும் வரை பணியாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நேரடியாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் ஒப்பந்தங்கள் இந்த முறை தானாகவே புதுப்பிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா அரசின் இந்த முடிவால் வேலையிழப்பவர்களில் பொறியாளர்களும், சட்ட அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8800 முதல் 10 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களாவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

வெண் அமிழ்தம்... ரஷ்மிகா மந்தனா!

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT