ராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு? சிபிஐ விசாரணை கோரும் பாஜக 
இந்தியா

ராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு? சிபிஐ விசாரணை கோரும் பாஜக

ராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து சிபிஐ விசாரணை

PTI

ராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்பட சில பாஜக தலைவர்கள் சதி செய்ததாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ் தரப்பு சில ஆடியோக்களை வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக, அரசியல்வாதிகளின் தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு காங்கிரஸ் ஒட்டுக்கேட்டது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், அந்த ஆடியோ விவரங்கள் உண்மை என்று பதிவு செய்யாத நிலையிலும் கூட அவை உண்மையானவை என்று முதல்வர் கெலாட் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இது குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பியிருக்கும் பத்ரா, தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்டால் அதில் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? ராஜஸ்தான் மாநில அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தவறான வழிமுறைகளைப் பின்பற்றுகிறதா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT