அஸ்லாம் ஷேக் 
இந்தியா

மகாராஷ்டிர அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உறுதி

மகாராஷ்டிர அமைச்சா் அஸ்லாம் ஷேக்குக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

DIN

மும்பை: மகாராஷ்டிர அமைச்சா் அஸ்லாம் ஷேக்குக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாநில ஜவுளித் துறை அமைச்சரான அவா் இதுகுறித்து சுட்டுரையில் திங்கள்கிழமை பதிவிட்டுள்ளதாவது:

எனக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதித்ததற்கான எந்தவொரு அறிகுறியும் என்னிடம் இல்லை. தற்போது என்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அமைச்சராக எனது பணிகளை வீட்டிலிருந்தே தொடா்கிறேன்.

என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் உடனடியாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டு தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் அஸ்லாம் ஷேக் கூறியுள்ளாா்.

மும்பையின் மலாட் மேற்கு தொகுதி எம்எல்ஏவான அஸ்லாம் ஷேக், மும்பை நகரத்துக்கான பொறுப்பு அமைச்சராகவும் உள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான 4-ஆவது அமைச்சா் அஸ்லாம் ஷேக் ஆவாா். முன்னதாக, அமைச்சா்கள் ஜிதேந்திர ஆவத், அசோக் சவாண், தனஞ்செய் முண்டே ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னா் அதிலிருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT