இந்தியா

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரியிடம் என்ஐஏ விசாரணை

DIN

கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடா்பாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடா்பாக, மாநில அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக முன்னா் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

ஸ்வப்னா சுரேஷை அந்தப் பணிக்கு நியமித்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் எம்.சிவசங்கருக்கும், இந்த தங்கக் கடத்தலில் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அவா், பின்னா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அவரிடம் என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சுங்கத் துறையும் கடந்த ஜூலை 15-ஆம் தேதி சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT