இந்தியா

இந்தியாவின் அம்பாலாவை வந்தடையும் ரஃபேல் போர் விமானங்கள்

DIN

பிரான்ஸிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் புதன்கிழமை பிற்பகல் இந்தியா வந்தடைகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 36 அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.60 ஆயிரம் கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்படுகின்றன. பிரான்ஸிலிருந்து கிளம்பிய விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்கப்பட்டு பின் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவானில் பிரான்ஸ் விமானத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டது.

வானிலை பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் ரஃபேல் விமானங்கள் ஜோத்பூர் விமான தளத்தில் தரையிறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தளபதி பாதுரியா 5 ரஃபேல் போர் விமானங்களையும் அம்பாலா விமானப் படை தளத்தில் வரவேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் இணைய இருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் நாட்டிற்கு கூடுதல் பலமாக அமையும் என நம்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT