இந்தியா

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பதில்

DIN


புது தில்லி: பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது.

அதில், பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதை எதிர்த்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு இன்று இந்த பதிலை அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT