இந்தியா

இந்தியா முழுவதும் 6,000 ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு: நிப்பான் பெயிண்ட்

DIN

உலகின் முன்னணி வண்ணப்பூச்சு உற்பத்தி நிறுவனமான நிப்பான் பெயிண்ட் பிரைவேட் லிமிடெட், இந்தியா முழுவதும் அதன் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

நிறுவனம் வழங்கும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6000க்கும் மேற்பட்ட வர்ணம் பூசுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரையில் காப்பீடுத் தொகை கிடைக்கும். 

இந்த புதிய முயற்சி குறித்து நிறுவனத்தின் தலைவர் மகேஷ் ஆனந்த் கூறுகையில், 'கரோனா வைரஸ் பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனால் தினசரி ஊதியத்துக்கு வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். ஆனால், அமைப்புசாரா துறையின் கீழ் வரும் வர்ணம் பூசுபவர்கள் போன்ற தொழிலாளர்களுக்கு கரோனா தொடர்புடைய ஆபத்து அதிகம் உள்ளது. 

எனவே, இதனை கருத்தில் கொண்டு வர்ணம் பூசுபவர்களுக்கும் மருத்துவக்காப்பீடு வழங்குகிறோம். காப்பீட்டுத் தொகையைத் தவிர, நிறுவனம் நிப்பான் பெயிண்டின் 'அமுதா சுரபி' எனும் டிஜிட்டல் கிரெடிட் கார்டு மற்றும் இ-வவுச்சர்களை வழங்குகிறது. 

இதன் மூலமாக ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் அருகில் உள்ள கிரானா ஸ்டோர்களில் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதுபோன்று ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளின் சரிபார்ப்பு பட்டியல் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று தெரிவித்தார். 

ஜப்பானில் நிறுவப்பட்ட நிப்பான் பெயிண்ட் நிறுவனம், 140 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. ஆசியாவில் வண்ணப்பூச்சு உற்பத்தியில் முதல் இடத்திலும், உலகின் முன்னணி வண்ணப்பூச்சு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT