இந்தியா

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, நாடு முழுதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் முடிந்த நிலையில், அவற்றின் காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30 வரை வழங்கப்பட்டு, பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: உதவி மையங்கள் அமைப்பு

மேல்நெல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: படகில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்

செட்டிகுப்பம் கிராம சபைக் கூட்டம்

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT