இந்தியா

தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு

DIN

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கவுடா, கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும், கர்நாடகத்தில் இருந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவைச் சேர்ந்த அசோக் கஸ்தி மற்றும் இரானா கடாடி ஆகியோர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜே.டி.எஸ். கட்சியின் குபேந்திர ரெட்டி மற்றும் பி.கே.ஹரிபிரசாத், காங்கிரஸின் ராஜீவ் கவுடா, பாஜகவின் பிரபாகர் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25 உடன் முடிவாகிறது. காலியாகும் இந்த 4 இடங்களுக்கு தேவ கவுடா, மல்லிகார்ஜுன் கார்கே உள்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ராஜ்யசபாவில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT