இந்தியா

கரோனா: கேரளத்தில் 75, கர்நாடகத்தில் 204 பேருக்கு தொற்று

DIN


கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 75 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 53 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 19 பேர்.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,351 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,324 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் ஜூன் 16 மாலை 5 மணி முதல் ஜூன் 17 மாலை 5 மணி வரை புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,734 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,804 பேர் குணமடைந்துள்ளனர். 2,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT