முகப்பு
இந்தியா

கேரளத்தில் 127, கர்நாடகத்தில் 416 பேருக்கு கரோனா தொற்று

கேரளம், கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
கேரளத்தில் புதிதாக 127 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 416 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


கேரளம், கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 87 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 36 பேர். அங்கு மொத்தம் 1,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,566 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 416 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,391 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.